பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை எப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனும் கோரிக்கையை முன்வைத்து மூதூரில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்ட சகல பெண்கள் அமைப்புகளும் ஒன்றிணைந்து இந்த அமைதிப்போராட்டத்தினை இன்று காலை 9.00 மணிக்கு மூதூர் மணிக்கூண்டு கோபுர சந்தியில் முன்னெடுத்தனர்.
அண்மைக் காலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக் காணப்படுகின்ற நிலையில், அக்குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கான தண்டனைகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இவ்வாறான போராட்டமானது இன்று நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

0 Responses to திருகோணமலையில் பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து போராட்டம்