அமெரிக்காவில் ஜூன் 8 முதல் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இளையோர் வில்வித்தை சேம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கச் செல்வதற்கென இருந்த 31 உறுப்பினர்கள் கொண்ட இந்திய அணியினரில் பெரும்பாலானவர்களுக்கு அமெரிக்கா விசா மறுத்துள்ளமை குறித்த விளையாட்டு வீரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குறித்த வில்வித்தை வீரர் குழுவில் 7 வீரர்கள், 2 பயிற்சியாளர்கள் மற்றும் இந்திய விளையாட்டுத் துறை ஆணையக அதிகாரி ஆகியோருக்கு அமெரிக்கா விசா வழங்கிய போதும் மீதமுள்ள 20 வீரர்கள், மற்றும் கொரிய பயிற்சியாளர் சே வோம் ஆகியோருக்கு விசா மறுக்கப் பட்டுள்ளது. இதற்கான உரிய காரணம் தெரியாத நிலையில் அமெரிக்காவின் இந்த விசா மறுப்பு முடிவினால் குறித்த போட்டித் தொடரில் இந்தியா பங்கேற்பது கேள்விக் குறியாகியுள்ளது. ஏற்கனவே 31 பேர் கொண்ட இந்த அணிக்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் அமெரிக்காவின் விசா மறுப்பை அடுத்து இந்திய ஒலிம்பிக் சங்கம் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்துக்கும் அமெரிக்க ஒலிம்பிக் சங்கத்துக்கும் இது தொடர்பில் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்ய முடிவெடுத்துள்ளது.
இதேவேளை அமெரிக்காவில் நடைபெறவுள்ள இளையோர் வில்வித்தை சேம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் கனவுடன் மாதக் கணக்கில் இந்தியாவின் அசாம், ஜார்கண்ட், பஞ்சாப் மற்றும் உ.பி மாநிலங்களைச் சேர்ந்த இளம் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to இந்திய வில்வித்தை வீரர்களுக்கு அமெரிக்கா விசா மறுப்பு!