Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையைச் சேர்ந்த தமிழ் அகதி ஒருவர் பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படவிருப்பதாக பிரித்தானியாவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜனகன் சிவநாதன் என்ற 22 வயதான தமிழ் அகதி சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு, பிரித்தானியாவின் மோர்டன் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவரின் அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் இந்த கைது இடம்பெற்றிருந்தது.

எனினும் அவர் நாடுகடத்தப்படுவதை தடுப்பதற்காக, அவர் தரப்பு சட்டத்தரணியால் கடந்த முதலாம் திகதி நீதிமன்றத்தில் ஆவணங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இதில் அவர் இலங்கையில் இருக்கும் போது துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக தெரிவிக்கும் மருத்துவ சான்றிதழ்களும் வழங்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

எனினும் இந்த வழக்கு எதிர்வரும் ஜுலை மாதம் 15ம் திகதி முன்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என்று கூறப்படுகின்ற நிலையில், அதற்குள் அவர் நாடுகடத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to பிரித்தானியாவில் இருந்து இலங்கை தமிழ் அகதி நாடு கடத்தப்படுகிறார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com