Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜம்மு- காஷ்மீரில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் சீக்கிய இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து ஜம்முவில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஜம்முவில் காலிஸ்தான் தீவிரவாத இயக்க தலைவர் ஜர்னல் சிங்கின் போஸ்டர்களை பொலிஸார் அகற்றியதை கண்டித்து நேற்று வியாழக்கிழமை சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வன்முறை வெடித்ததை அடுத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பொலிஸாரின் இந்நடவடிக்கையை கண்டித்து ஜம்மு, சம்பா, பூஞ்ச் மாவட்டங்களில் இன்று வெள்ளிக்கிழமை முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், அடைக்கப்பட்டுள்ளன. 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சீக்கிய அமைப்பினர் ஜம்மு பதன்கூர் தேசிய நெடுஞ்சாலையில் டயர்களை கொளுத்தி போட்டு போக்குவரத்தை முடக்கியுள்ளனர்.

மீண்டும் வன்முறை வெடிக்காமல் தடுக்க ரோந்து பணிகளை தீவிரபடுத்தியுள்ள இராணுவத்தினர் போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். பதற்றத்தை தணிக்கும் வகையில் போராட்ட பகுதிகளில் இராணுவ வீரர்களின் கொடி அணி வகுப்பும் நடத்தப்பட்டது. ஜம்மு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

0 Responses to சீக்கிய இளைஞர் சுட்டுக்கொலை; ஜம்மு- காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com