Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

'மேகி' உள்ளிட்ட நான்கு நிறுவனங்களின் நூடுல்ஸ் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. அத்தோடு, இருப்பிலுள்ள மொத்த சரக்குகளையும் உடனே திரும்பப் பெறவும் உத்தரவிட்டுள்ளது.

மேகி நூடுல்ஸில் உள்ள காரீயத்தின் அளவு, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் மற்றும் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை விட, அதிகம் உள்ளது என்று சில மாநிலங்களில் கண்டறியப்பட்டது.

அதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம், தமிழகத்தில் விற்பனை செய்யப்படும், நுாடுல்ஸ் உணவுப் பொருட்களின் மாதிரியை எடுத்து, சோதனை செய்து, அவை உணவு மற்றும் தர நிர்ணய சட்டத்தில், வரையறுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளுக்கேற்ப உள்ளதா என கண்டறியும்படி, உணவு பாதுகாப்பு துறையினருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, உணவு பாதுகாப்பு அதிகாரிகள், தமிழகம் முழுவதும், 65 நூடுல்ஸ் உணவு மாதிரிகள் எடுத்து, பரிசோதனைக்கு அனுப்பினர். சென்னையில் எடுக்கப்பட்ட, 17 உணவு மாதிரிகளில், ஏழு மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் கிடைத்துள்ளன.

ஏழு மாதிரிகள் முடிவில், ஆறு மாதிரிகளில், காரீயத்தின் அளவு, உணவு பாதுகாப்பு சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள, 10 இலட்சத்திற்கு, 2.5 பி.பி.எம்., - பார்ட்டிக்கிள் பெர் மில்லியன் - என்ற அளவை விட, அதிகம் இருப்பது தெரிய வந்தது.

'நெஸ்லே' நிறுவனத்தின், 'மேகி நூடுல்ஸ், வாய் வாய் எக்ஸ்பிரஸ் நுாடுல்ஸ், ரிலையன்ஸ் செலக்ட் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், ஸ்மித் அண்ட் ஜோன்ஸ் சிக்கன் மசாலா நூடுல்ஸ்' ஆகியவற்றில், அனுமதிக்கப்பட்ட அளவை விட, காரீயத்தின் அளவு, அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, முதல்வர் ஜெயலலிதா, சட்டப்படியான நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, சம்பந்தப்பட்ட நூடுல்ஸ் உற்பத்தி நிறுவனங்களின் மீது, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006, பிரிவு, 30-2-ஏ கீழ், இந்நிறுவனங்கள், நூடுல்ஸ் உணவுப் பொருட்களை, தமிழகத்தில் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும், முதல்கட்டமாக மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைத்து, உணவுப் பாதுகாப்பு கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், நூடுல்ஸ் உணவுப் பொருட்களை, விற்பனையில் இருந்து, உடனடியாக திரும்பப் பெறவும், சம்பந்தப்பட்ட நூடுல்ஸ் உற்பத்தி நிறுவனங்களுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.

0 Responses to ‘மேகி’ நூடுல்ஸ் விற்பனைக்கு தமிழகத்திலும் தடை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com