Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புதிய தேர்தல் சீர்திருத்தத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகையை 225ஆக வைத்துக் கொண்டு, தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கையை 125க்குள் மட்டுப்படுத்துவது சிறுபான்மையினரையும், சிறிய கட்சிகளையும் வெகுவாக பாதிக்கும் என்று நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான (கஃபே) தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில், அந்த இயக்கத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன், நேற்று செவ்வாய்க்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “20வது திருத்தத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்தது மகிழ்ச்சியான விடயமாகும். ஆனால், பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 225 ஆகவும் தேர்தல் தொகுதியின் எண்ணிக்கையை 125ஆகவும் மட்டுப்படுத்துவது, சிறிய அரசியல் கட்சிகளுக்கும் முஸ்லிம்களுக்கும், இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்நாட்டு மக்கள் நீண்டகாலம் எதிர்பார்த்த ஒரு திருத்தம் இதுவாக இருந்தபோதும், அதன் ஆரம்ப கால வரைபுகளில் பாராளுமன்ற அங்கத்தவர்களின் எண்ணிக்கை 234 – 235ஆக இருக்க வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. சிறுகட்சிகளுக்கும் சிறுபான்மையினருக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காகவே இவ் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

முஸ்லிம்கள், வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் மக்கள், மக்கள் விடுதலை முன்னணி, ஜாதிக ஹெல உறுமய போன்ற சிறு கட்சிகளுக்கு தனது பிரதிநிதித்துவத்தை உறுதி செய்து கொள்வதற்கு அங்கத்தவர் தொகையை அதிகரிப்பது அவசியமாக உள்ளது.

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 20வது திருத்தத்தின்படி மூன்று பாரிய பிரச்சினைகள் உள்ளன.

1. 125 தேர்தல் தொகுதிகளை நிர்ணயிப்பதற்கு அதிக காலம் தேவைப்படும்.
2. சிறுபான்மையினரின் அங்கத்துவத்துக்கு தேவையான இரட்டை தேர்தல் தொகுதிகளை நிர்ணயிக்க முடியாது போகும்.
3. வடக்கு பகுதியில் வாழும் சிங்கள மக்களதும், வட கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கும் இது பாரிய சவாலாக அமையும்.

இந்தத் திருத்தத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்தால் அது நிறைவேறாமலிருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. மக்கள் வெறுக்கும் இந்தத் தேர்தல் முறையும் சாதாரண தர பரீட்சை கூட சித்தி அடையாத 94 உறுப்பினர்களையும், உயர்தர சித்தி அடையாத 142 உறுப்பினர்களையும் ஐந்து வீதத்துக்கும்; குறைந்த பெண் உறுப்பினர்களையும் கொண்ட இது போன்ற ஒரு பாராளுமன்றம் மீண்டும் உருவாகலாம். ஆகவே அமைச்சரவைக்கு முன் வைக்கப்பட்ட புதிய தேர்தல் சீர்திருத்தம் இன்றைய தேவைக்கு ஏற்றவாறு மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to புதிய தேர்தல் சீர்திருத்தம் சிறுபான்மையினரைப் பாதிக்கும்: கஃபே

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com