இலங்கை அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள், நோர்வே மற்றும் தென்னாபிரிக்கா ஆகியவற்றின் பிரதிநிதிகள் இலண்டனில் கடந்த வியாழக்கிழமை முதல் சந்தித்து பேசி வருவது, வடக்கு- கிழக்கின் உள்ளக அபிவிருத்தி பற்றியே என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பிரதிநிதி , நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், இலங்கைக்கான நோர்வேயின் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம், சுவிஸர்லாந்தின் வெளிவிவகார அமைச்சினைச் சேர்ந்த மார்டின் டெசிஞ்சர் , தென் ஆபிரிக்காவின் In Transformation Initiative (ITI) என்ற அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகள், உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மற்றும் நோர்வே ஈழத் தமிழர் அவை மற்றும் உலகத் தழிழர் பேரவையின் சிரேஷ்ட உறுப்பினர் டாக்டர் ரமணன் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
தென் ஆபிரிக்காவின் In Transformation Initiative அமைப்பின் அனுசரணையுடன் நடைபெறும் இந்த கூட்டம், கடந்த காலங்களில் சிங்கப்பூர் மற்றும் சில நாடுகளில் நடைபெற்ற கூட்டங்களின் தொடர்ச்சியாகவே நடைபெற்றுவருகிறது.
இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும் நோக்கத்தை இலக்காக கொண்டே இந்த சந்திப்புக்கள் நடைபெற்று வருவதாக கடந்த காலங்களில் விளக்கம் கூறப்பட்டிருந்தது. ஆனால், இந்த சந்திப்புக்கள் மிக இரகசியமான முறையில் நடத்தப்பட்டு வருவதாகவும், தாயகம் மற்றும் புலம்பெயர் நாடுகளில் தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் இந்த சந்திப்புக்களில் ஓரம் கட்டப்பட்டுள்ளதாகவும், இதனால் இந்த சந்திப்புக்களின் உண்மையான நோக்கம் என்ன என்பது புரியாத புதிராகவே இருப்பதாகவும் சந்தேகங்களும் குற்றச்சாட்டுக்களும் தமிழ் அமைப்புக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் மத்தியில் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தன.
எனினும், தற்போது நடைபெற்று வரும் சந்திப்புக்களில் இனப்பிரச்சினைகளுக்கான தீர்வு பற்றி பேசப்படவில்லை என்றும், இப்போதுள்ள சிறிய ஜனநாயக இடைவெளியைப் பயன்படுத்தி வடக்கு- கிழக்கில் உள்ளக அபிவிருத்தியை மேற்கொள்வது தொடர்பிலேயே கவனம் செலுத்தப்படுவதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

0 Responses to வடக்கு- கிழக்கின் உள்ளக அபிவிருத்தி தொடர்பிலேயே இலண்டன் சந்திப்பில் பேசப்படுகிறது: சுமந்திரன்