Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வில்பத்து சரணாலயத்தின் ரம்மியமான சூழல் சீர்குலைந்துள்ளதை தான் தனது இரு கண்களாலும் பார்த்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் யாழ்ப்பாணம் சென்றபோது, விமானத்தில் இருந்தபடியே வில்பத்துவின் ரம்மியமான சூழல் சீர்குலைந்துள்ளதை கண்டதாகவும், இது அரசியல்வாதிகள் எடுத்த தவறான அரசியல் தீர்மானங்களின் விளைவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல்வாதியோ இல்லை வியாபாரியோ எவராக இருந்தாலும் சூழலையும், அதன் இயற்கைத் தன்மையையும் அழிக்க விடமாட்டேன். மட்டுமன்றி, தனது ஆட்சிக் காலத்தில் அப்படிப்பட்டவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

பொலனறுவையில் நடைபெற்ற சுற்றாடல் பாதுகாப்பு தினம் தொடர்பிலான வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

0 Responses to வில்பத்து சரணாலயத்தின் சூழல் சீர்குலைந்துள்ளது: ஜனாதிபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com