செவ்வாய்க்கிழமை (07-07-2015) கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதியப்பட்ட ஜப்பானில் வசித்து வந்த நிகழ்கால உலகின் வாழ்ந்து வரும் மிக வயதான ஆணான சகாரி மொமொய் என்பவர் தனது 112 ஆவது வயதில் சிறுநீரகம் செயலிழந்த நிலையில் டோக்கியோ நர்சிங் ஹோமில் மரணமடைந்துள்ளார்.
இதனை சைட்டமா நகர அதிகாரி அயா காட்டோ உறுதி AP ஊடகத்துக்கு உறுதிப் படுத்தியுள்ளார்.
சீன மொழியில் அமைந்த கவிதைகளை விரும்பிப் படித்து வந்த இந்த உலகின் மிக வயதான தாத்தா நிறைவான தூக்கமே தனது நீண்ட கால வாழ்க்கைக்கான இரகசியம் எனத் தெரிவித்து வந்தவர் ஆவார். தற்போது உலகில் வாழ்ந்து வரும் உலகின் மிக வயதான ஆண் என்ற பட்டம் 112 வயதை எட்டிய இன்னொரு ஜப்பானியரான யசுட்டாரோ கொயிடே என்பவர் வசம் சென்றிருப்பதாக 100 வயதைக் கடந்த உலகின் மிக நீண்ட ஆயுள் கொண்ட நபர்களது விபரங்களைப் பட்டியலிடும் Gerontology Research Group என்ற அமைப்பின் இணையத் தளம் குறிப்பிட்டுள்ளது.
இந்த அமைப்பின் பட்டியலில் முதல் இடத்தில் எதிர்ப் பாலினத்தில் அதாவது உலகில் மிக நீண்ட காலம் வாழும் நபர் மற்றும் பெண்ணாக நியூயோர்க்கின் புரூக்ளினில் வசித்து வரும் சுசன்னா முஷாட் ஜோன்ஸ் என்பவர் விளங்குகின்றார். தனது 116 வயதை நேற்று திங்கட்கிழமை எட்டியிருந்த இவர் கடவுள் மீது தனக்கு இருக்கும் நம்பிக்கையே தனது நீண்ட ஆயுளின் இரகசியம் எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to உலகில் வாழ்ந்து வந்த மிக வயதான ஆண் 112 ஆம் வயதில் ஜப்பானில் மரணம்!