Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கமல் நடிப்பில் வெளிவந்து சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் பாபநாசம் படத்துக்கு வரிவிலக்கு அளிக்க முடியாது என்று தமிழக அரசு  தெரிவித்துள்ளது.

பாபநாசம் படம் மலையாள இயக்குனர் ஜோசப் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம். இப்படம் முதலில் திரிஷ்யம் என்கிற பெயரில் மலையாளத்தில் வெளிவந்தது. மோகன்லால், மீனா நடிப்பில் வெளிவந்த இப்படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட்.இதையடுத்து தெலுங்கு, தமிழ், கன்னடம் என்கிற மொழிகளிலும் இப்படம் இயக்கப்பட்டது. ஹிந்தியிலும் இப்படம் வெளியாக உள்ளது.தமிழில் கமல், கவுதமி நடிக்க, இப்போது திரைக்கு வந்திருக்கும் இப்படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்துக்கு தமிழக அரசு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று, படக்குழுவினர் கோரிக்கை வைத்ததாகத் தெரிய வருகிறது. ஆனால்,படத்தில் காவல்துறையின் கண்ணியம் கேள்விக்குறியாகி உள்ளது என்றும், மாணவி குளிப்பதை வீடியோவாகப் பதிவு செய்வதுப் போன்ற வன்முறை காட்சிகள் இடம்பெற்றுள்ளது என்றும், கடைசியாக பாவத்தை செய்துவிட்டு பாபநாசம் ஆற்றில் குளித்து பாவத்தைப் போக்கிக் கொள்கிறேன் என்பது போன்ற பிற்போக்குத் தனமான கொள்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு உள்ளன என்றும் கூறி பாபநாசம் படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்து இருந்தாலும், வரிவிலக்கு அளிக்க முடியாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

0 Responses to பாபநாசம் படத்துக்கு வரிவிலக்கு அளிக்க முடியாது:தமிழக அரசு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com