ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பாலஸ்தீன ஜிஹாதி விடுதலை இயக்கத்தின் பிரபல உண்ணாவிரதப் போராளியும் பல தடவை அதற்காகக் கைது செய்யப் பட்டவருமான காடெர் அட்னன் என்பவரை இஸ்ரேல் அதிகாரிகள் 11 மாத சிறை வாசத்துக்குப் பின்னர் விடுதலை செய்துள்ளனர்.
வெஸ்ட்பேங்க் சோதனைச் சாவடியில் கையளிக்கப் பட்ட இவரை மருத்துவப் பரிசோதனைகளுக்காக ஜெனின் வைத்தியசாலைக்கு பாலஸ்தீன அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
55 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்துக்குப் பிறகு ஜூன் 29 இல் இவரை விடுதலை செய்வது தொடர்பான ஒப்பந்தம் இரு கிழமைகளுக்கு முன் ஜூன் 29 இல் எட்டப் பட்டிருந்தது. முதன் முறையாக பெப்ரவரி 2012 இல் 66 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தின் போது இவர் அடையாளம் காணப் பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவரது போராட்டத்துக்காக இஸ்ரேல் இராணுவத்தின் சர்ச்சைக்குரிய நிர்வாகத் தண்டனை முறையின் கீழ் இவர் இரகசிய அடையாளம் மூலம் கைது செய்யப் பட்டதுடன் எந்தவித வெளிப்படையான ஆதாரமும் இன்றி இவருக்குத் தண்டனை அளிக்கப் பட்டு வந்தது.
நிர்வாகத் தண்டனை முறைமையின் கீழ் ஏற்கனவே அட்னான் சுமார் 6 வருடங்கள் சிறையில் கழித்திருந்தவர் என்பதுடன் இம்முறை அவர் 10 ஆவது முறையாகக் கைது செய்யப் பட்டும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அட்னானை பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் இன் வெஸ்ட்பேங் தலைவராக பாலஸ்தீன போராளிக் குழு அடையாளப் படுத்தியிருந்தது. ஈரானின் ஆதரவுடன் செயற்பட்டு வரும் இந்த இஸ்லாமியப் போராளிக் குழு கடந்த காலத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் மூலம் பல இஸ்ரேலியர்களைக் கொலை செய்து வந்துள்ளது. இந்நிலையில் நிர்வாகத் தண்டனை முறையின் கீழ் பாலஸ்தீனர்கள் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் திணிக்கப் படுவதாக 2012 இல் தெரிவித்திருந்த சர்வதேச மன்னிப்புச் சபை இம்முறையின் கீழுள்ள கைதிகளை இஸ்ரேல் உடனடியாக எந்தவித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் எனவும் அழைப்பு விடுத்திருந்தது.
மேலும் பாலஸ்தீனத்தின் மனித உரிமைகள் அமைப்பின் தகவல் படி இஸ்ரேலில் நிர்வாகத் தண்டனை முறையின் கீழ் இன்றைய நிலையில் 500 இற்கும் அதிகமான பாலஸ்தீனக் கைதிகள் தண்டிக்கப் பட்டு வருவதாகவும் தெரிய வருகின்றது.

0 Responses to பாலஸ்தீனத்தின் பிரபல உண்ணாவிரதப் போராளியை விடுதலை செய்தது இஸ்ரேல்!