யாழ்.குப்பிளான் பகுதியில் சுன்னாகம் பொலிஸார் நடத்திய சோதனை நடவடிக்கையில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே மேற்படி கைது இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிருத்துவதுடன் கைப்பற்றிய பொருட்களும் நாளை நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும்,
இச் சந்தேகநபர்கள் இருவரும் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

0 Responses to யாழில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்த இருவர் கைது