எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் போட்டியிடவுள்ள நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதரவுடனேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினரும், ஜாதிக ஹெல உறுமயவும் நல்லாட்சிக்கான ஐக்கிய முன்னணியில் அங்கம் வகிக்கின்றன. இந்த அரசியல் முன்னணி ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.
குறித்த கூட்டணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவுடனேயே தோற்றம் பெற்றுள்ளதாகவும், நாளை திங்கட்கிழமை ஜனாதிபதி முக்கியமான தீர்மானமொன்றை நாட்டு மக்களுக்கு விடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்கப்பட்டதையடுத்து சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினர் நல்லாட்சிக்கான ஐக்கிய முன்னணியில் இணைந்து கொண்டுள்ளனர்.

0 Responses to ‘நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி’ மைத்திரி ஆதரவுடனேயே உருவாக்கம்!