Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி சற்றுமுன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) அலரிமாளிகையில் இடம்பெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்துடன் நிகழ்வுடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அமைச்சர் ராஜித சேனாரத்னவும், ஜாதிக ஹெல உறுமய சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இதன்மூலம், ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் கீழ் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய முன்னாள் அமைச்சர்களை அரசியலில் இருந்து அகற்றும் முகமாகவே நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

0 Responses to நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி உதயம்; புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com