எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) தனித்துப் போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளதாவது, “ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்பன பொதுத் தேர்தல் தொடர்பாக கலந்துரையாட அழைப்புக்கள் விடுத்துள்ளன. ஆனால் நாளை வெள்ளிக்கிழமை ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ளேன். இதன் பின்னரே சில முடிவுகளை எடுக்க வேண்டிய தேவையும் அவசியமும் காணப்படுகின்றது.
எம்மைப் பொறுத்த வரையில் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருகின்றது என்பது எமக்கு பிரச்சினை அல்ல. யார் வந்தாலும் தமிழ் மக்களுக்கு செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும் அதனை செய்விப்பதே எமது தேவைப்பாடும் நிலைப்பாடும் ஆகும்.” என்றுள்ளார்.

0 Responses to பொதுத் தேர்தலில் ஈபிடிபி தனித்து போட்டி: டக்ளஸ்