எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேட்பாளர்களை நியமிப்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள் தொடர்ந்தும் இழுபறி நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் நேற்று செவ்வாய்க்கிழமையும் கூடிய ஆராய்ந்த போதும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்குவது மற்றும் ஊழல் மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை விலக்குவது தொடர்பிலான சர்ச்சைகள் முடிவுக்கு வரவில்லை என்று கூறப்படுகின்றது.
இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்கப்பட்டாலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவரை பிரதமர் வேட்பாளராகவோ, தேர்தல் பிரச்சாரங்களுக்கு தலைமை தாங்கவோ அனுமதியளிக்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாக தெரிவித்துள்ளார். இதனால், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் பெரும் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகி வந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ‘கை’ சின்னத்தில் தனித்துப் போட்டியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

0 Responses to ஐ.ம.சு.கூ.வுள் குழப்பம் நீடிக்கிறது; தனித்து ‘கை’ உயர்த்துகிறது சுதந்திரக் கட்சி?