Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களைப் பெற்று சாதனை படைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். இந்தச் சாதனையை நிலைநாட்ட தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் திரளவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனு முதன்மை வேட்பாளர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கையளிக்கப்பட்டது. இதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதாவது, "கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டதால் காட்டாட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து ஜனநாயக ஆட்சியை - நல்லாட்சியை ஏற்படுத்தினோம். எனினும், இந்த ஆட்சியில் எமது உரிமைகள் அனைத்தையும் நாம் பெறவில்லை.

எனவே, தமிழரின் சொந்த இடங்களில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றி எமது மக்கள் நிம்மதியாக வாழவும், தமிழ் அரசியல் கைதிகள் என்ற பெயரில் சிறைகளில் வாடுகின்ற எமது உறவுகளை மீட்கவும், காணாமற்போனோர் தொடர்பான விசாரணையைத் துரிதப்படுத்தவும், எமக்கான நிரந்தர அரசியல் தீர்வைப் பெறவும் நாம் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஓரணியில் நிற்கவேண்டும்.

வடக்கு, கிழக்கில் வாழும் எமது தமிழ் மக்கள் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தவறாது வாக்களிக்கவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெறுவதன் மூலம் பாராளுமன்றில் பேரம் பேசும் சக்தியாக மாற முடியும். அதேவேளை, தென்னிலங்கையிடமும், சர்வதேச சமூகத்திடமும் தமிழரின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து எமக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ளமுடியும்.” என்றுள்ளார்.

0 Responses to தமிழர் உரிமைகளைக் காக்க ஒன்றிணைவோம்; சம்பந்தன் அழைப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com