பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு தயாரிக்கும் வேலைகளில் ஐக்கிய தேசியக் கட்சி மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க, இம்முறை நேர்மையானவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மூன்று தினங்களுக்கிடையில் எதிர்பாராத விதமாக 10 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாகவும் அவற்றை வேட்புமனுக்குழு விரிவாக ஆராய்ந்து வருவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
பொதுத் தேர்தலில் களமிறக்கப்படவிருக்கும் வேட்பாளர்கள் தொடர்பாக பிரதமரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பிரதமர் குறிப்பிட்டுள்ளதாவது, “வேட்பாளர் தெரிவு மிக ஆழமாக ஆராயப்பட்டு வருகின்றது. ஊழல், மோசடிகளில் சம்பந்தப்பட்டோர் மக்களின் நம்பிக்கையை இழந்த எவருக்கும் இம்முறை வாய்ப்பளிக்கப்பட மாட்டாது. நேர்மையானவர்களுக்கும் இளைஞர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். மாவட்ட மட்டத்தில் வெற்றி வாய்ப்பை உறுதிசெய்யக்கக்கூடிய விதத்தில் திறமைசாலிகளுக்கும் மக்கள் அபிமானத்தைப் பெற்றவர்களுக்குமே வாய்ப்பளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு 6ஆம் திகதி திங்கட்கிழமை இறுதி முடிவெடுக்கப்படும். அதன்பின்னர் வேட்புமனுக்களை தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும். வேட்புமனுக்கள் தொடர்பில் இறுதி முடிவெடுக்கப்பட்டதன் பின்னர் மாவட்ட மட்டத்தில் வேட்புமனுக்களை தயாரிக்கும் வேலை ஆரம்பிக்கப்படும். அதன் பின்னர் 13 ஆம் திகதிக்கிடையில் வசதிக்கேற்ப ஒவ்வொரு மாவட்டத்திலும் வேட்புமனு தாக்கல் இடம்பெறும்.
இத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மையான ஆசனங்களை கைப்பற்றும். எமது கட்சி பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொண்டாலும் தேசிய அரசை அமைத்துச் செயற்படுவதே எமது இலக்காகும்.
புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதும் நாட்டுக்குப் பொருத்தமான தேசியக் கொள்கைத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இந்த தேசியக் கொள்கை எக்காலத்துக்கும் பொருத்தமானதாகவும், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மாற்றப்பட முடியாத வகையிலும் அமையும். நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லப் பொருத்தமான திட்டங்களை அறிமுகப்படுத்தும் விதத்தில் அரசின் தேசியக் கொள்கைத் திட்டம் அமையும்.” என்றுள்ளார்.

0 Responses to ஐ.தே.க.வில் நேர்மையானவர்களுக்கும், இளைஞர்களுக்குமே முன்னுரிமை: ரணில்