ஊழல்வாதிகள், மோசடிக்காரர்கள் மற்றும் பாலியற்குற்றவாளிகளுக்கு வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சிகளின் தலைவர்கள் வேட்புமனு வழங்கக் கூடாது என்று கஃபே அமைப்பின் நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னகோன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாட்டின் பிரதான கட்சிகளாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியுமே காணப்படுகின்றன. இந்தக் கட்சிகளின் தலைவர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உள்ளனர்.
கடந்த 9 மாத காலமாக ஊழல்வாதிகள், மோசடிக்காரர்கள், பாலியற்குற்றங்களில் ஈடுபட்டவர்களை பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யக்கூடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் குறிப்பிட்டு வந்தனர்.
ஆகவே, ஜனாதிபதியும் பிரதமரும் ஊழல்வாதிகள், மோசடிக்காரர்கள், பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு வேட்புமனு வழங்கப்படமாட்டது என உறுதியளிக்கவேண்டும். அவ்வாறில்லாமல் அவர்களுக்கு வேட்புமனு வழங்கப்பட்டால் அதற்கான முழுப்பொறுப்பையும் அவர்களே ஏற்கவேண்டும்.'' என்றுள்ளார்.

0 Responses to ஊழல்வாதிகள், பாலியற்குற்றவாளிகளுக்கு வேட்புமனு வழங்கக் கூடாது: கஃபே