சர்வாதிகாரம் பீடித்திருந்த நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி மக்கள் வழங்கிய ஆணையை துஷ்பிரயோகம் செய்ய முடியாது என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் தன்னுடன் சேர்த்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நல்லாட்சியை மையப்படுத்தி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ‘நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி’யில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மாதுலுவாவே சோபித தேரர், அத்துரலிய ரத்ன தேரர், பாட்டாலி சம்பிக்க ரணவக, ஹிருனிக பிரேமசந்திர, அர்ஜுன ரணதுங்க, எம்.கே.டீ.எஸ். குணவர்தன உள்ளிட்டவர்களுடன் 49 சிவில் அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஒரே மேடையில் அமர இருப்பதாக ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

0 Responses to மக்கள் ஆணையை மீற முடியாது; நல்லாட்சியை ஏற்படுத்த ஐ.தே.க.வுடன் இணைந்து போட்டி: ராஜித சேனாரத்ன