Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராஜீவ் காந்தியின் கொலை வழக்குத் தொடர்பான குற்றவாளிகளை விடுவிக்கத் தடை கோரிய வழக்கின் அரசியல் சாசன அமர்வு அறிவிக்கப்பட்டது.

ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றவாளிகள் என்று உறுதி செய்யப்பட்ட முருகன், பேரறிவாளன்,சாந்தன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து கடந்த வருடம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.அதோடு சிறைத் தண்டனை பெற்றவர்கள் ஏற்கனவே ஆயுள் தண்டனை போன்று பல வருடங்களை சிறையில் கழித்து உள்ளதால்,அவர்களை விடுதலை செய்யும் பொறுப்பை தமிழக அரசு எடுத்துக்கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தமது உத்தரவில் தெரிவித்திருந்தது.

ஆனால், இதற்கு அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தொடுத்து இருந்தது . அந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், மனுவை வேறு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதாக அறிவித்திருந்த உச்ச நீதிமன்றம் அதற்கான கால அவகாசத்தையும் கோரி இருந்தது.

இன்று அதற்கான அரசியல் சாசன அமர்வை தலைமை நீதிபதி தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்டு அமர்த்தி உள்ளதாகவும், இவ்வழக்கின் விசாரணை வருகிற 15ம் திகதி தொடங்கும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

0 Responses to ராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளிகள் விடுதலை தொடர்பான வழக்கு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com