Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை செய்ததை எதிர்த்து, திமுகவைச் சேர்ந்த அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டவர்கள் வருமானத்துக்கு அதிமாக சொத்து சேர்த்த முற்றிலுமாக விடுதலையாகி உள்ளனர். இந்த தீர்ப்பை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி வழங்கிய நிலையில், தீர்ப்பில் பல தவறானத் தகவல்கள் உள்ளன என்று கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கூறியிருந்தார். இந்நிலையில் கர்நாடக அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் தாமதமாகி வருகிறது.

இதையடுத்து திமுகவைச் சேர்ந்த அன்பழகன் வழக்கின் தீர்ப்பில் உள்ளத் தவறுகளைச் சுட்டிக் காட்டி, 2 ஆயிரத்து 500 பக்கங்கள் கொண்ட மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். மனு மிக விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து திமுக சார்பில் அன்பழகன் மேல்முறையீடு மனு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com