Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈராக்கிலும் சிரியாவிலும் பல பகுதிகளைக் கைப்பற்றி இஸ்லாமிய மாநிலம் என்ற பெயரில் தனிநாடாக அமைத்துப் போராடி இன்று உலக நாடுகளுக்குத் தலைவலியாக இருந்து வரும் ISIS போராளிகளின் தலைவன் அபூபக்கர் அல் பக்தாதி அண்மையில் அமெரிக்க விமானங்களின் குண்டு வீச்சில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி அல் பக்தாதியைக் கவிழ்க்க சதிப் புரட்சி ஒன்று அரங்கேறியதைக் கண்டு பிடித்த ISIS உளவுத் துறை அது தொடர்பில் 13 பேரைக் கைது செய்து அவர்களைச் சுட்டுக் கொலை செய்துள்ளது. மேலும் இவ்வாறு கொலை செய்யப் பட்டவர்களில் 5 பேர் முக்கிய இராணுவத் தலைவர்கள் என்பதுடன் இதில் ஒருவர் அல் பக்தாதியின் நெருங்கிய நண்பரான அபு உஸ்மான் என்றும் தெரிய வருகின்றது.

அபு உஸ்மான் அண்மையில் ISIS கைப்பற்றி இருந்த ஈராக்கின் 2 ஆவது மிகப் பெரிய நகரான மோசுலின் வெளிவிவகாரங்களைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பில் அல் பக்தாதியால் நியமிக்கப் பட்டிருந்தார் என்பதுடன் அவர் ISIS இன் ஷுரா கவுன்சிலில் அங்கம் வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மோசுலின் மேற்கே கஷ்லனி தளத்தில் இவருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டதுடன் அதைத் தொடர்ந்து அபு உஸ்மானின் கீழ் போர் புரிந்த சுமார் 250 சிரிய மற்றும் அரபுப் போராளிகள் ஈராக்கை  விட்டு வெளியேறி சிரியாவின் ரக்கா நகரைச் சென்றடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 Responses to ISIS தலைவருக்கு எதிரான சதிப்புரட்சியில் நெருங்கிய நண்பர் உட்பட 13 பேர் கொலை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com