Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்ஸில் அகதி அந்தஸ்து கோரி தான் விண்ணப்பிக்கவில்லை என விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சே ஊடகங்களுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கார்டியன் பத்திரிகைக்கு அசாஞ்சேயின் பாதுகாப்புக் குழு இயக்குனர் பல்ட்டசர் கர்ஷொன் கூறுகையில், பிரெஞ்சு அதிபர் ஹொல்லாண்டேவுக்கு அசாஞ்சே வரைந்திருந்த திறந்த கடிதத்தில் அங்குள்ள திறமையான அதிகாரிகளால் தனது விவகாரம் கையாளப் படும் பட்சத்தில் பிரான்ஸுக்குத் தான் விஜயம் செய்ய விரும்புவதாகவே தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் அசாஞ்சே தனது கடிதத்தில் பிரெஞ்சு குடியுரிமை உடைய தனது இளம் குழந்தையையும் அவரது தாயாரையும் 5 வருடங்களாகப் பார்க்க முடியவில்லை எனவும் ஆதங்கம் தெரிவித்துள்ளார். இதேவேளை பிரெஞ்சு அதிபர் ஹொல்லாண்டேவின் அலுவலகம் முன்னதாக விடுத்த அறிக்கையிலும் அசாஞ்சே அகதி அந்தஸ்துக் கோரியது  உண்மையல்ல என்று மறுக்கப் பட்டுள்ளது. மேலும் அவ்வாறு அகதி அந்தஸ்து கோரினாலும் அதற்கேற்ப தம்மால் உடனே செயற்பட முடியாது என்றும் அசாஞ்சே தற்போது அந்தளவுக்கு உடனடி ஆபத்தான சூழ்நிலையில் இல்லை எனவும் கூட குறித்த அலுவலகம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய நாட்டவரான ஜூலியன் அசாஞ்சே தன் மீது சுமத்தப் பட்டுள்ள குற்றச்சாட்டு காரணமாக சுவீடன் அரசால் கைதாவதில் இருந்து தப்பிப்பதற்காக 2012 ஜூன் முதற்கொண்டு இலண்டனிலுள்ள எக்குவடோர் தூதரகத்தில் தஞ்சமடைந்து வாழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to பிரான்ஸில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பிக்கவில்லை!:ஜூலியன் அசாஞ்சே

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com