தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை அனந்தி முற்றாக இழந்துள்ளார்.
வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில் தற்போது வடமாகாணசபை சார்பினில் மக்கள் பிரதிநிதியாக உள்ள அனந்தி அதனை தொடர கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராசா ஆகியோர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
பெண் ஒருவரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக களமிறக்கும் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து சுரேஸ்பிறேமச்சந்திரன் அனந்திக்கு இடம் வழங்க முன்வந்துள்ளார்.எனினும் தமிழரசுக்கட்சியினுடைய தலைவர் மாவை சேனாதிராசா அனந்திக்கு வாய்ப்பு வழங்குவீராக இருந்தால் கட்சிக்கு வழங்கப்பட உள்ள இரண்டாவது ஆசனத்துக்கான வேட்பாளருக்குரிய வாய்ப்பை நாம் நிராகரித்து விடுவோம் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் எக்காரணம் கொண்டும் அனந்திக்கு வாய்ப்பு வழங்க வேண்டாம் எனவும்; தற்போது பாராளுமன்ற உறுப்பினராக உள்ள தமது கட்சி சார்ந்த ஒருவருக்கு தோல்வியடையும் நிலையையும் அது ஏற்படுத்தி விடும் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளதாக அக்கட்சியின் வட்டுக்கோட்டை அமைப்பாளர் துளசிதாசன் தெரிவித்துள்ளார்.
இதனால் இறுதி சந்தர்ப்பமாக மாமனிதர் ரவிராஜின் மனைவிக்கு சந்தர்ப்பம் வழங்கி அருந்தவபாலனை அகற்றும் நடவடிக்கைக்கு மாவை சந்தர்ப்பம் வழங்கியுள்ளதாக தெரியவருகின்றது.

0 Responses to அனந்தி அவுட்! மாவை,சம்பந்தர் முடிவு!