ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுப்பிய கடிதத்துடன் ஓரளவு அடுத்த பிரதமர் யார் என்பது வெட்ட வெளி்ச்சமாகியுள்ளது.
இதுவரையில் யார் பிரதமர் என்பது பலத்த சந்தேகங்களை எழுப்பியது. குறிப்பாக ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சி அமைத்தால் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் என்பது வெளிப்படையுண்மை.
ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைத்தால் யார் பிரதமர்? என்பது இதுவரையில் தெளிவாக கூற முடியாதிருந்தது.
ஒன்று மட்டும் உறுதியாக கூறலாம். 35 வருடங்களுக்கு மேலதிகமாக சுதந்திர கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய ஜனாதிபதி மைத்திரியின் கையில் தான் உள்ளது அடுத்த பிரதமர் யார் என்பது.
தற்போது மிகப்பெரிய கேள்வி ஒன்று எழுந்துள்ளது. அதாவது மக்கள் நினைப்பவர்களா அல்லது ஜனாதிபதி மைத்திரி நினைப்பவரா அடுத்த பிரதமர்?
தற்போது ஜனாதிபதி மைத்திரி, மகிந்தவிற்கு அனுப்பிய கடிதமும், மகிந்த, ஜனாதிபதி மைத்திரிக்கு அனுப்பிய பதில் கடிதமும் இத்தேர்தலை மிகவும் சூடுபிடிக்க வைத்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றால் பிரதமர் பதவிக்கு பொருத்தமான பல சிரேஸ்ட உறுப்பினர்கள் இருப்பதாக நேரடியாகவும், மகிந்தவிற்கு பிரதமர் பதவி கொடுக்க முடியாது என மறைமுகமாகவும் ஜனாதிபதி மைத்திரி ஏலவே அறிவித்திருந்தார்.
ஆனால், சற்றுமுன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரதமர் பதவியேற்புக் கோரிக்கையினை, ஏழு மூத்த அரசியல்வாதிகள் மறுத்துள்ளதாக முன்னாள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் அமைச்சர், ஜோன் செனவிரத்ன நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
இதில் ஜனாதிபதி மைத்திரியினால் அடுத்த பிரதமருக்குரிய அந்தஸ்து அதிகமாக கொடுக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்தவின் கையெழுத்தும் அடங்குகிறது.
மாறாக சுசில் பிரேமஜயந்த இன்று தான் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் சிலர் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்க கையெழுத்திட்டு முடிந்ததாக கூறியுள்ளமையும் 14 மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைக்கும் என திட்டவட்டமாக கூறியுள்ளமையினையும் வைத்துப் பார்க்கின்ற பொழுது மகிந்த ராஜபக்ச கட்சி வெற்றியீட்டினால் அவர்தான் பிரதமர் என்பதனை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
மாறாக இன்று மகிந்த ஜனாதிபதி மைத்திரிக்கு அனுப்பிய பதில் கடிதத்தில் நான் கடந்த ஜனவரி 9ம் திகதி ஜனாதிபதி தேர்தல் முடிவு வந்து முடிவதற்கு முன்னர் அலரிமாளிகையில் இருந்து வெளியேறியது
மற்றும் சில தினங்களுக்குப் பின் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவர் பதவி மற்றும் கட்சியை உங்களிடம் ஒப்படைத்தது உங்கள் கோரிக்கைக்கு அமைய நான் எடுத்த தீர்மானத்தின் பேரிலாகும்.
ஆனால் 2015 பெப்ரவரி மாதமாகும் போது கட்சியின் பெரும்பாலானவர்கள் மற்றும் மக்கள் மீண்டும் செயற்பாட்டு அரசியலுக்கு வருமாறு என்னை தூண்டியதை நான் நினைவுபடுத்துகிறேன்.
நான் 2015 ஜனவரி 9ம் திகதி மக்கள் ஆணைக்கு மதிப்பளித்தது போல நீங்களும் 2015 பொதுத்தேர்தலில் மக்கள் ஆணைக்கு மதிப்பளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன் என அவர் கூறியமையானது திட்டவட்டமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றால் மகிந்தவிற்கு பிரதமர் பதவி வழங்கப்படும் இல்லையேல் பெற்றுக் கொள்ளப்படும் என்பது உறுதியாகியுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் இருந்த அனைத்து கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமை இப்பொது தேர்தலில் இல்லை என்பது உறுதி.
குறிப்பாக ஜனாதிபதி மைத்திரி மகிந்தவை தான் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக தன் கட்சியினை விட்டுக்கொடுக்க அவர் தயார் இல்லை.
ஐக்கிய தேசிய கட்சிக்கான ஆதரவினை இதுவரையில் மறைமுகமாக கூட ஜனாதிபதி மைத்திரிபால தெரிவிக்கவில்லை.
அனைத்து விடயங்களையும் வைத்துப் பார்க்கின்ற பொழுது ரணிலை பிரதமராக்க மைத்திரிக்கு முடியும். ஆனால் மகிந்த பிரதமராவதனை ஜனாதிபதி மைத்திரியால் தடுக்க முடியாது.
காரணம் ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இத்தேர்தலில் பெரும்பான்மையினை பெற முடியாது. ஆகவே சிறிய கட்சிகளை நம்பியிருக்க வேண்டிய சூழல் கட்டாயம் வரும்.
அந்த சந்தர்ப்பத்தில் ரணிலின் அழைப்பினை விட ஜனாதிபதி மைத்திரியின் அழைப்பிற்கு தான் மதிப்பு அதிகம். சர்வ கட்சிகளையும் இணைத்து ரணிலை பிரதமராக்குவாரா? இல்லை மகிந்தவின் கட்டாயத்தின் பெயரில் சிறிய கட்சிகளை இணைத்து மகிந்த பிரதமராகுவாரா? இரண்டும் மைத்திரியின் கையில் தான் இருக்கின்றது.
வெற்றியினை அமைதியாக கொண்டாடுங்கள் என ரணிலும் 117 ஆசனங்களை கைப்பற்றுவோம் என மகிந்தவும் இத்தேர்தல் களத்தினை மிக மிக சூடுபிடிக்க வைத்திருக்கின்றார்கள்.
ஆகவே அடுத்த பிரதமர் யார் என்பதில் மக்களின் விருப்பத்தினை விட ஜனாதிபதி மைத்திரியின் தீர்மானத்தில் தான் இருக்கின்றது.
திவ்யநாதன்

0 Responses to இவர்தான் அடுத்த பிரதமர்….? - சூடு பிடிக்கும் அரசியல்களம்!