Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு இறுதிக் கட்ட வாதம் நடைப்பெறுகிறது.

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடுத் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அனைத்துத் தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் கடந்த வாரமே இவ்வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், சிபிஐ தரப்பு விசாரணைக் குறித்து மேலும் சில தகவல்கள சேகரிக்க அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்ட நிலையில், வழக்கு விசாரணையை சிபிஐ நீதிமன்றம் இன்றைக்கு ஒத்தி வைத்தது. அதோடு இறுதிக்கட்ட வாதத்தின் போது வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவரும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவும் பிறப்பித்திருந்தது.

எனவே, இன்று ஆ.ராசா, கனிமொழி, சரத் குமார் ரெட்டி உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராகி உள்ளனர். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறையில் அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்று மத்தியக் கணக்குத் தணிக்கைத் துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது என்பது இவ்வேளையில் குறிப்பிடத் தக்கது.

0 Responses to இன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு இறுதிக் கட்ட வாதம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com