இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட சோட்டா ராஜனை இந்தியாவுக்கு கொண்டு வரும் தீவிர நடவடிக்கைகளில் புலனாய்வுத்துறை ஈடுபட்டு உள்ளது.
கடத்தல்காரன் என்று சொல்லப்படும் மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ரஹீமின் முன்னால் கூட்டாளி சோட்டா ராஜன். இவர் தியேட்டர்களில் பிளாக் டிக்கெட் விற்றே பெரிய ஆளாகி, பின்னர் தாவூத் இப்ரஹீமுடன் நெருங்கிய நண்பரானார் என்று கூறப்படுகிறது.இந்நிலையில் இருவரும் பல வருடங்களுக்கு முன்னர் கருத்து வேறுபாடால் பிரிந்தனர் என்றாலும், தாவூத்தினால் ராஜன் உயிருக்கு அடிக்கடி ஆபத்து ஏற்பட்டு வந்ததாகவும், இதனால் அடிக்கடி சோடா ராஜன் நாடு மாறிக்கொண்டு இருந்தார் என்றும் கூறப்படுகிறது.
ஆனால்,இருவருமே சர்வதேச போலீசாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் என்கிற நிலையில், சோட்டா ராஜன் நேற்று இந்தோனேஷியாவில் அதிரடியாகக் கைது செய்யப்பாட்டார். இவரை இந்தியாவுக்கு அழைத்து வந்தால் பல மர்ம முடிச்சுகள் அவிழும் என்கிற நிலையில், சோட்டா ராஜனை இந்தியாவுக்கு அழைத்து வர புலனாய்வுப் பிரிவினர் ரகசிய ஏற்பாடுகளைச் செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.மும்பை குண்டுவெடிப்பில் தாவூத்துக்கும் தொடர்புள்ளது என்று கூறப்படும் நிலையில் சோட்டா ராஜனிடம் விசாரணை செய்ய வேண்டிய அவசியம் புலனாய்வுப் பிரிவினருக்கு ஏற்பட்டு உள்ளது.

0 Responses to சோட்டா ராஜனை இந்தியாவுக்குக் கொண்டுவர நடவடிக்கைகள் தீவிரம்