இந்தியாவில் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரம் போல், இலங்கையின் வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கும் அதிக அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று இந்தியா விரும்பியது என்று இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ப.சிதம்பரம், நேற்று யாழ்ப்பாணத்தில் வைத்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்தார். இந்தச் சந்திப்பு உத்தியோகபூர்வமற்ற தனிப்பட்ட சந்திப்பொன்று முதலமைச்சர் ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பில், இந்திய- இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது, இலங்கையில் மாகாண அலகுகள் ஏற்படுத்தப்பட்டு வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று இந்தியா விரும்பியது. அதற்கான வரைபுகளை எழுதும் பொறுப்பு தன்னிடமும், இன்னொரு சட்ட நிபுணரிடமும் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியினால் வழங்கப்பட்டதாக ப.சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அதிக அதிகாரங்கள் வழங்கப்படுவதை எதிர்த்து அனைத்து மாகாணங்களுக்கு சமமான அதிகாரங்களை வழங்க வேண்டும் என்று முடிவு செய்து, அதிகாரங்களை குறைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to வடக்கு- கிழக்கிற்கு அதிக அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று இந்தியா விரும்பியது: ப.சிதரம்பரம்