Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சமத்துவமாக நடத்தப்படுவதன் மூலமே, இலங்கையுடனான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த முடியும் என்று சீனா வலியறுத்தியுள்ளது.

இலங்கையும் சீனாவும், பாரம்பரியமான நட்புறவைக் கொண்ட நெருங்கிய அயல்நாடுகள். இரு நாடுகளுக்கும் இடையிலான நடைமுறை ஒத்துழைப்பு, சமத்துவம் மற்றும் பரஸ்பரம் நன்மையை அடிப்படையாக கொண்டது. இருநாடுகளுக்கும், மக்களுக்கும் நன்மையளிக்கத்தக்க வகையில், சமத்துவமாக நடத்தப்படுவதன் மூலமே, இலங்கையுடனான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த முடியும் என்றும் சீனா தெரிவித்துள்ளது.

பீஜிங்கில் ஊடகவியலாளர்களிடம் பேசிய சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுன்யிங்கே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள சீனாவின் கடன்கள் தொடர்பான வட்டிவீதத்தைக் குறைக்கவும், முதலீடுகளை மேற்கொண்டு உதவவும் சீனா முன்வர வேண்டும் என்று இலங்கை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளமை குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

0 Responses to சமத்துவமாக நடத்தப்படுவதன் மூலமே வர்த்தகத் தொடர்புகளை வலுப்படுத்த முடியும்: இலங்கைக்கு சீனா வலியுறுத்தல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com