Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உலகின் வரலாற்றிலே சட்டவிரோதச் செயற்பாடுகளுக்காக நியாயம் கோரி சர்வதேச நீதிமன்றம் செல்வது இந்திய மீனவர்களாகத்தான் இருக்க முடியும் என்று மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்திய (தமிழக) மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் வருவதனை தடுக்கும் வகையில் இலங்கை கரையோர பாதுகாப்புப் படையினர் தற்போது முன்னெடுத்துவரும் கடுமையான நடவடிக்கைகளுக்கு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திலிருந்து பாரிய அழுத்தங்கள் எதுவும் தனக்கு வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இருந்த போதும் இந்திய மத்திய அரசாங்கம், தமிழ்நாட்டின் உணர்வலைகளுக்கு பதிலளிக்க வேண்டிய அதேநேரம், இலங்கையுடனான இராஜதந்திர உறவினையும் சீராக முன்னெடுக்க விரும்பும் நிலையிலேயே தற்போது இருப்பதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துமீறும் இந்திய மீனவர்களுக்கெதிராக இலங்கை அரசாங்கம் அதிக தண்டப்பணத்தை அறவிடுதல் மற்றும் கைது செய்தல் தொடர்பில் கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து அண்மையில் பாராளுமன்றத்தில் விவாதித்திருந்தது. இதேவேளை, இலங்கை கரையோர பாதுகாப்பு படையினர் இவ்வாரம் முதல் இந்திய மீனவர்களின் வலைகள் மற்றும் படகுகளை சேதப்படுத்தும் வேலைத்திட்டத்தையும் ஆரம்பித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இந்தியாவின் தேசிய மீனவர்கள் பேரவை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வரும் செயற்பாடுகள், வரையப்படவுள்ள சட்ட நகல், தண்டப்பண அதிகரிப்பு என்பவற்றுக்காக நியாயம் கோரி சர்வதேச நீதிமன்றம் அல்லது ஐக்கிய நாடுகள் சபையினை நாடவிருப்பதாக அதன் தலைவர் எம். இளங்கோ அறிவித்துள்ளார்.

இது இலங்கையில் எவ்வாறானதொரு நிலைமையை உருவாக்கும் என கேட்டதற்கே அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார். சர்வதேச சட்ட விதி முறைகளுக்கமையவே நாட்டின் கடல் எல்லைகள் வரையறை செய்யப்பட்டுள்ளன.

ஒரு நாட்டின் கடல் எல்லைக்குள் அத்துமீறுவது சட்டப்படி குற்றமாகும். குற்றத்திற்கே நியாயம் கோருபவர்கள் வரலாற்றிலேயே முதற்தடவையாக இந்திய மீனவர்களாகத்தான் இருக்க முடியும். அவ்வாறே அவர்கள் விரும்புவது போல் இந்திய மீனவர்களுக்கு நியாயம் கிடைத்தாலும், உலக வரலாற்றிலேயே பிழையான செயற்பாடொன்றுக்கு நியாயம் கிடைத்தது இதுதான் முதற்தடவையாக இருக்கும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

தேசிய மீனவர்கள் பேரவைத் தலைவர் இளங்கோ, சர்வதேச சட்டத்தில் இலங்கை - இந்திய கடல் எல்லை வாழ்வாதார விவகாரங்களுக்கான வழியாகவே வரையறை செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

0 Responses to சட்டவிரோதிகளான இந்திய மீனவர்கள் நீதிமன்றம் சென்று நியாயம் கோருகின்றனர்: மஹிந்த அமரவீர

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com