போரினால் பாதிக்கப்பட்டவர்களுடன் அரசாங்கம் நேரடியாக பேசுவதனூடே நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் நம்பிக்கையான மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் விடயம் தொடர்பில் சர்வகட்சி மாநாட்டைக் கூட்டி, அனைத்துக் கட்சிகளினதும் அபிப்பிராயங்களை அரசாங்கம் உள்வாங்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
கடந்த 22ஆம் திகதி வியாழக்கிழமை இந்த மாநாடு இடம்பெற்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானம் தொடர்பாக எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் தமது யோசனைகளை எழுத்துமூலம் முன்வைக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், சர்வகட்சி மாநாடுகளை நடத்த அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளை உள்வாங்குவதற்கு மேலாக, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறும் விடயத்தில் பொது கலந்துரையாடலொன்றை முன்னெடுக்கவேண்டும். பாதிக்கப்பட்ட தரப்பினருடன் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவேண்டும் என்று பாக்கியசோதி சரவணமுத்து குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகள், சமயத் தலைவர்கள், இலங்கை வாழ் மற்றும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையைச் சார்ந்த புத்திஜீவிகள் ஆகியோரின் கருத்துகளை உள்வாங்கிக் கொள்வதற்காக மூன்று வகையான மாநாடுகளை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார். இதற்கமைய சர்வ கட்சி மாநாட்டை அண்மையில் கூட்டி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார். இந்நிலையிலேயே, போரில் பாதிக்கப்பட்ட தரப்பினரான (வடக்கு, கிழக்கு) மக்களிடம் கலந்துரையாடலொன்றை மேற்கொள்ள வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

0 Responses to போரில் பாதிக்கப்பட்ட மக்களுடன் அரசாங்கம் பேச வேண்டும்: பாக்கியசோதி சரவணமுத்து