விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து அரசியலில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளாரே தவிர, அவர் இன்னும் இணையவில்லை என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி தெரிவி்ததுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்புரிமையில் இருந்து விலகி தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து அரசியல் செய்யும் விருப்பத்தை கருணா வெளியிட்டுள்ளார். எங்கள் மீது அவர் வைத்திருக்கின்ற மதிப்பும், நம்பிக்கையுமே இது. அதனை நான் வரவேற்கின்றேன்.
ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை படிப்படியாக குன்றி வருகின்றது. அவர்களின் ஆதரவாளர்களே ஒரு புதிய அணியை உருவாக்க வேண்டுமென விரும்புகின்றார்கள். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விடுதலைப் புலிகளால் ஆரம்பிக்கப்பட்டதென்று இதுவரை காலமும் கூறிவந்த இரா.சம்பந்தன் திடீரென நிலைமையை மாற்றி அதனை தாங்களே உருவாக்கியதாகவும், விடுதலைப் புலிகளுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் எதுவித சம்பந்தமும் இல்லையெனவும் கூறியுள்ளார்.
இரா.சம்பந்தனின் இந்த மனமாற்றம் உண்மையாக இருந்தாலும் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையம் தோற்றுவித்துள்ளது. ஆனால், அதை வைத்து மக்களை ஏமாற்றி தமிழர் விடுதலைக் கூட்டணியை முற்றாக அழிக்க முற்பட்டதையும் விரைவில் ஒத்துக்கொள்வார் என நம்புகின்றேன்.
இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப மக்கள் விருப்பப்படி ஒரு புதிய அணியை உருவாக்கி அவர்கள் நம்பிக்கை வைக்கக் கூடிய வகையில் அநேகரின் விருப்பில் ஒரு புது அணியை பல்வேறு கட்சிகளுடன் கலந்தாலோசித்து உருவாக்க உத்தேசித்துள்ளேன். பல்வேறு கட்சிகளுடன் இது சம்பந்தமாக பேசியும் உள்ளேன். அதனடிப்படையில் விநாயகமூர்த்தி முரளிதரன் தனது ஆதரவினை வழங்குவதற்கு முன்வந்துள்ளார்.
அதேபோன்று வேறு பலரும் புதிய அணியொன்று உருவாக்கினால் அதில் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவிப்பர். இதுதான் உண்மை. ஆனால் இதுசம்பந்தமாக வெளியாகிய பல்வேறு கருத்துக்கள் அத்தனையும் உண்மைக்கு புறம்பானவையாகும். தமிழர் விடுதலைக் கூட்டணி மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றி அவ்வப் போது மக்களுக்கு அறியத் தருவோம்.” என்றுள்ளார்.

0 Responses to கருணா தமிழர் விடுதலைக் கூட்டணியில் இன்னும் இணையவில்லை: வீ.ஆனந்தசங்கரி