தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் வெளிக்கொணர்வதற்காகவே சர்வதேச விசாரணையைக் கோருகின்றோம். நீதியைக் கோருவது ஒருபோதும் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
கடந்த கால அரசாங்கங்களே எமது பிரச்சினையை உள்நாட்டில் தீர்க்கமுடியாது, அதனை சர்வதேச மட்டத்துக்குக் கொண்டுசெல்லவேண்டும் என்ற நிலைமையை ஏற்படுத்தியிருந்தன. உண்மையைக் கண்டறிவதற்கான விசாரணைகள் மூலம் மக்களுக்குத் தீர்வு கிடைப்பது மாத்திரமன்றி பிரச்சினைக்கான அடிப்படைகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்த பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே தர்மலிங்கம் சித்தார்த்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சினையை எமக்குள்ளேயே தீர்த்திருந்தால் சர்வதேசத்துக்குக் கொண்டுசென்றிருக்கத் தேவையில்லை. நாமும் இலங்கையர்தான் என்று உணர்ந்து செயற்படுவதற்கான சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
அதேநேரம், உள்ளக விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு உள்ளீடுகள் பரிந்துரைக்கப்பட்டபோதும், மக்கள் இந்த விசாரணைப் பொறிமுறை மீது நம்பிக்கை கொள்ளவில்லை. ஏன் நம்பவில்லையென்றால், பெரும்பான்மையினரை ஆதரித்துவரும் அரசாங்கம் நாம் எதிர்பார்க்கும் சில விடயங்களை இன்னும் செய்துமுடிக்கவில்லை.
மக்கள் மத்தியில் அமைதியுருவாகி நம்பிக்கையொன்று ஏற்பட்டுள்ளபோதும், காணி முழுமையாக விடுவிக்கப்படவில்லை. சிறைக் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. குறிப்பாக சிறையில் உள்ள இளைஞர்கள் தமது வழக்குகளைக் கொண்டு நடத்துவதற்குக் கூட நிதி வசதியைக் கொண்டிராதவர்கள். அவர்களின் குடும்பங்கள் பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளன. இரண்டு வருடங்கள் மாத்திரம் சிறையில் இருக்கவேண்டியவர்கள் 18 வருடங்களாக சிறையில் இருக்கின்றனர்.
தமிழ் மக்களை நம்ப வைக்கவேண்டுமாயின் உடனடியாக காணிகள் விடுவிக்கப்படுவதுடன், சிறையில் உள்ள இளைஞர்கள் விடுவிக்கப்படவேண்டும். இதன் மூலமே விசாரணைப் பொறிமுறை தொடர்பில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.” என்றுள்ளார்.

0 Responses to நீதி கோருவது பழிவாங்கல் அல்ல: தர்மலிங்கம் சித்தார்த்தன்