இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் முன்னேற்றத்திற்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் அர்ப்பணிப்போடு உள்ளதாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் 70வது ஆண்டு நிறைவு தினம் மற்றும் ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கை இணைந்து 60வது ஆண்டு நிறைவு தினம் ஆகியன இன்று சனிக்கிழமை கொழும்பில் அனுஷ்டிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஐக்கிய நாடுகளுடனும், இணை நிறைவனங்களுடனும் இணைந்து செயற்படுவதற்கு ஜனநாயக நாடென்கிற வகையில் இலங்கை ஆவலோடு இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

0 Responses to இலங்கைக்கு எதிர்காலத்திலும் ஐ.நா. ஒத்துழைப்பு வழங்கும்: பான் கீ மூன்