Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் காணாமற்போனவர்களின் பலர் பிள்ளையானால் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் நிறைவில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் முன்னைய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட பல ஒட்டுக்குழுக்கள் காணப்பட்டன. இந்த ஒட்டுக்குழுக்கள் தொடர்ந்தும் தமிழ் மக்களை துன்புறுத்தி வந்தனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானால் இளைஞர் யுவதிகள் கடத்தப்பட்டனர். தற்போது அவர்களுக்கு என்ன நடந்தது. என்பது எவரிற்கும் தெரியாது. இதன்போது, கடத்த இளைஞர் யுவதிகள் பிள்ளையானால் கடத்தப்பட்டு தீவுச்சேனை பகுதியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது வலுப்பெற்றுள்ளது. எனவே, குறித்த பகுதியில் அமைந்துள்ளதாக நம்பப்படும் மனித புதைக்குழி தோண்டப்பட வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to பிள்ளையானால் கடத்தப்பட்ட பலர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம்: சீனித்தம்பி யோகேஸ்வரன்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com