Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 02.00 மணியளவில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்த தேசிய அரசாங்கத்தின் முழு ஆண்டுக்குமான முதலாவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.

வரவு செலவுத் திட்டம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, சர்வதேச வர்த்தக விவகார அமைச்சர் மலிக் சமரவிக்ரம, நிதியமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூனா மகேந்திரன் ஆகியோர் நேற்று வியாழக்கிழமை கலந்துரையாடியிருந்தனர்.

வரவு செலவுத் திட்டத்தை அனுமதிப்பது தொடர்பான விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று முற்பகல் 09.30 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் நடைபெறவிருப்பதாக அமைச்சரவையின் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக கூறியுள்ளார்.

புதிய அரசாங்கத்தால் இன்று சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத் திட்டம் கடந்தகாலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 75 வீதம் முதல் 80 வீதம் வரையான நிவாரணங்களை வழங்குவதாக அமைவதுடன், கடந்த கால வரவு செலவுத் திட்டங்களைவிட 5 மடங்கு அதிகமான நிவாரணங்களை மக்களுக்கு வழங்குவதாக அமையும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இவ் வரவு செலவுத் திட்டம் தமக்கான வரவு செலவுத் திட்டம் என்பதை ஒவ்வொருவரும் உணரும் வகையில் இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்தின் மொத்த செலவீனம் 3,138 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதோடு, அரச வருமானம் 1,941 பில்லியன்களாக அமையும் என எதிர்பார்க்க ப்படுகிறது. இது தொடர்பான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

0 Responses to 2016க்கான வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com