தேசிய அரசாங்கத்தின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்காவினால் பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 02.00 மணிக்கு முன்வைக்கப்பட்டது.
அத்தியாவசியப் பொருட்களின் விலை 20 வீதத்தினால் குறைப்பு உள்ளிட்ட பல விடயங்களைக் கொண்ட வரவு செலவுத் திட்ட அறிக்கையை நிதியமைச்சர் சுமார் 4 மணித்தியாலங்கள் வாசித்தார்.
அதன்போது, “கடந்த பத்து மாதங்களில் அரசியல், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 2004 தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் நாட்டு மக்களின் முக்கிய தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. கடந்த கால ஆட்சியில் நாட்டின் கடன் மாத்திரமே உயர்ந்துகொண்டிருந்தது. ராஜபக்ஷ யுகம் நாட்டில் மீண்டும் வரக் கூடாது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்தின் மொத்த செலவீனம் 3,138 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதோடு, அரச வருமானம் 1,941 பில்லியன்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது
வரவு செலவுத் திட்டத்தின் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
1. பத்து இலட்சம் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
2. புதிதாக அரசாங்க உத்தியோகத்தில் இணைந்து கொள்பவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம்.
3. டெங்கு, சிறுநீரக நோய் மற்றும் புற்றுநோய் ஆகியவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
4. கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ரயில் மற்றும் வாகன போக்குவரத்தில் எரிபொருளுக்கு பதிலாக சூரிய சக்தியை பயன்படுத்த திட்டம்.
5. சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு கடன் உதவி- 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
6. வன்னி, அம்பாறை பகுதிகளில் சிறிய வணிக நிலையங்களை அமைக்க திட்டம்.
7. கீரி சம்பா 50 ரூபா, சம்பா 41 ரூபா, நாடு 38 ரூபா ஆகியன நிர்ணய விலை அடிப்படையில் அரசினால் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும்.
8. மீனவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா காப்புறுதி.
9. 400 கிராம் பால் மா பக்கற்றின் விலை 325 ரூபாவிலிருந்து 295 ரூபாவாக குறைப்பு.
10. தேயிலை உற்பத்தி துறை எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விசேட குழு.
11. பொக்குரு கம்மான திட்டத்தின் மூலம் கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தல் : 21 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
12. வவுனியாவில் பொருளாதார வலயம் அமைக்கப்படும்.
13. சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் போதைபொருள் ஒழிப்புக்காக 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
14. பிரதேச சபை மற்றும் மாகாண சபைகள் இலத்திரனியல் திட்டம் மூலம் இயங்க திட்டம்.
15. 2016 ஜனவரி முதலாம் திகதி முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்.
16. இந்தியாவில் காணப்படும் 'ஆதார்" திட்டம் போல் இலங்கையிலும் அமுல்படுத்தப்படும்.
17. புதிய முதலீட்டு சட்டம் அறிமுகம்.
18. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 15 நாட்களில் அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
19. சொகுசு வரி முற்றாக நீக்கப்படும்.
20. குறைந்த வருமானம் பெறுபவர்கள் எதிர்வரும் 5 வருடங்களுக்குள் ஒரு இலட்சம் வீடுகள் அமைத்து குடியேற்றப்படுவர்.
21. அரச பாவனையற்ற காணிகளில் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்படும்.
22. ஒரு தேர்தல் தொகுதியில் 1000 வீடுகளை அமைக்க 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
23. திவிநெகும நிதியத்தை தேசிய சேமிப்பு வங்கியில் சேர்த்தல்.
24. ஆடை, பாதணி மற்றும் மின்சார உபகரணங்கள் உட்பட 15 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு.
25. தனியார் ஊழியர்களின் வேலை நாட்களை ஐந்து வேலைநாட்களாக குறைக்க தீர்மானம். தனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபா அதிகரிக்க பரிந்துரை.
26. விஞ்ஞான, கணித பீடங்கள் இல்லாத பாடசாலைகளில் விஞ்ஞான கணித பீடங்களை அமைக்க 450 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
27. ஒரு வகுப்பில் அதி கூடுதலாக 35 மாணவர்கள் மாத்திரமே இருக்கலாம்.
28. உயர்தரப் பரீட்சைக்கு பின்னர் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி.
29. தொழிநுட்ப பாடத்தை பல்கலைக்கழகங்களில் கற்க 5 ஆயிரம் மாணவர்களுக்கு அனுமதி.
30. கல்விக்கு 90 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
31. சிறுநீரக நோயாளிகளுக்கு மின்னேரியாவில் வைத்தியசாலை அமைக்கப்படும்.
32. குருநாகல், அநுராதபுரம் வைத்தியசாலைகளை புனரமைக்க 3 ஆயிரம் மில்லியன் ரூபா.
33. நல்லூர் மற்றும் கண்டியில் புற்றுநோய் வைத்தியசாலைகள் அமைக்கப்படும்.
34. கேஸ் விலை 150 ரூபாவாலும் மண்ணெண்ணெய் 10 ரூபாவாலும் குறைப்பு.
35. மத்தல விமான நிலையத்தில் விமான தொழில்சார் பயிற்சி நிலையம் ஆரம்பிக்க திட்டம்.
36. 11 அத்தியாவசிய பொருட்களின் விலை 100க்கு 20 வீதமாக குறைக்கப்படும்.
37. பெரிய வெங்காயம் அதி கூடிய சில்லறை விலை 85- 95 ரூபா.
38. 425 கிராம் ரின் மீன் 125 ரூபாவால் குறைப்பு.
39. சிறுவர்களுக்கான பால் மா 100 ரூபாவால் குறைப்பு.
40. நெத்தலி 418 ரூபாவாக குறைப்பு.
41. பருப்பு 169 ரூபாவாக குறைப்பு.
42. கட்டா கருவாடு 120 ரூபாவால் குறைப்பு.
43. கடலை கிலோ 169 ரூபாவாக குறைப்பு.
44. கெசினோ, புகையிலை ஆகியவற்றுக்கு 25 வீதமாக வரி அதிகரிப்பு.
45. வரி விலக்குகளை மறுபரிசீலனை செய்ய திட்டம்.

0 Responses to வரவு செலவுத் திட்டம் 2016: அத்தியாவசியப் பொருட்களின் விலை 20 வீதத்தால் குறைப்பு!