Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தார்கள் என்று குற்றஞ்சாட்டி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் தடை செய்யப்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றினதும், தனிநபர்கள் சிலர் மீதானதுமான தடை நீக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட வர்த்தமானியிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புலம்பெயர் அமைப்புக்கள் 16 மற்றும் தனிநபர்கள் 424 பேர் மீதான தடையை முன்னாள் அரசாங்கம் விதித்திருந்தது. அதில், 8 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தடை நீக்கப்பட்டுள்ளது. அத்தோடு, 269 தனிநபர்கள் மீதான தடையும் நீக்கப்பட்டுள்ளன.

தடை நீக்கப்பட்ட அமைப்புக்கள்
1. அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ்
2. பிரித்தானிய தமிழர் பேரவை
3. கனேடிய தமிழர் பேரவை
4. உலகத் தமிழர் பேரவை
5. கனேடிய தமிழர் தேசிய அவை
6. தமிழ்த் தேசிய அவை
7. தமிழ் இளைஞர் அமைப்பு
8. உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

தடை நீடிக்கப்பட்டுள்ள அமைப்புக்கள்
1. தமிழீழ விடுதலைப் புலிகள்
2. தமிழர் புனர்வாழ்வுக் கழகம்
3. தமிழர் ஒருக்கிணைப்புக் குழு
4. உலகத் தமிழர் இயக்கம்
5. நாடு கடந்த தமிழீழ இராச்சியம்
6. உலகத் தமழீழ மக்கள் அவை
7. உலகத் தமிழர் நிவாரண நிதியம்
8. தலைமையகக் குழு

0 Responses to எட்டு புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் - 269 தனிநபர்கள் மீதான தடையை இலங்கை அரசு நீக்கியது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com