ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர துருக்கிச் சென்ற 2 தமிழக இளைஞர்கள் அங்கிருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் மற்றும் கரூரை சேர்ந்த அவரின் நண்பர் ஆகிய இருவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து இணையதளம் மூலமாக சிரியா நாட்டிற்குச் செல்வது குறித்த தகவல்களை திரட்டியுள்ளனர். அதில் பெயர் தெரியாத நபர் ஒருவர் அவர்களுக்கு வழிகாட்டியுள்ளார்.
பின்னர், கடந்த ஆகஸ்ட் மாதம் சுற்றுலா பயணிகள் போல் பெங்களூலிருந்து டுபாய் சென்ற இருவரும் பின்னர் அங்கிருந்து துருக்கி நாட்டிற்குச் சென்றுள்ளனர்.
துருக்கி - சிரியா நாட்டின் எல்லைப்பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி, எல்லைத்தாண்டி செல்வது குறித்து இருவரும் விசாரித்ததால் சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர், துருக்கி அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
உடனே வந்த துருக்கி அதிகாரிகள், தமிழக இளைஞர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்காக வந்து இருப்பதை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் இருவரையும் துருக்கியிலிருந்து கடந்த 15 நாள்களுக்கு முன்பு இந்தியாவுக்கு நாடு கடத்தினர். பெங்களூருக்கு விமானம் மூலம் வந்து சேர்ந்த அவர்களை பிடித்து, ரகசிய இடத்தில் விசாரணை நடத்திய உளவுத்துறை அதிகாரிகள், இருவரையும் எச்சரிக்கை செய்து அவர்களது குடும்பத்தினருடன் அனுப்பிவைத்துள்ளனர்.
இருவரையும் தொடர்ந்து கண்காணித்து வரும் உளவுத்துறை அதிகாரிகள், அவர்கள் துருக்கி வரை செல்ல உதவி செய்தவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Responses to ஐ.எஸ் இயக்கத்தில் சேர சென்ற தமிழ் இளைஞர்கள் சிக்கினர்