Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையர் ஒருவர் வருடமொன்றுக்கு 30 கிலோ சீனியை நுகர்கின்றார். இதனால், மொத்த சனத்தொகையில் 26 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பீடிக்கப்படும் நிலை ஏற்பட்டிருப்பதாக சுகாதார சேவைப்பணிப்பாளர் டாக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

இதனை கருத்திற் கொண்டு உணவகங்கள், விடுதிகள், தேனீர் கடைகளில் சீனி பயன்படுத்தப்படுவது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை விசேட சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சகல அரச நிறுவன கூட்டங்கள், செயலமர்வுகள், வைபவங்கள் மற்றும் விழாக்களின் போது சீனியின்றியே தேனீர் கோப்பி என்பன வழங்க வேண்டும் எனவும் சீனி வேறாக வழங்கப்பட வேண்டும் எனவும் இந்த சுற்று நிருபத்தினூடாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சுற்றுநிருபம் சகல மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்கள். மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர்கள், சுகாதார நிறுவன பிரதானிகள், மாநகர சபைகள் என்பவற்றுக்கு வழங்கப்பட் டுள்ளன.

குறைந்த சீனி பாவனையினூடாக ஆரோக்கியமான வாழ்வு என்ற தொனிப் பொருளில் இந்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதோடு நீரிழிவு குறித்து மக்களை அறிவூட்டுவதற்காக நாளை சனிக்கிழமை சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் இருந்து பாத யாத்திரை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த டாக்டர் பாலித மஹிபால, “நாடு முகம் கொடுத்துள்ள பிரதான சவால்களில் ஒன்றாக தொற்றா நோய் இருக்கிறது. நீரிழிவு நோய் இதில் பிரதானமானதாகும். 30 கிலோவாக உள்ள சீனி பாவனையை பாதியாக குறைப்பதே எமது இலக்காகும். இது குறித்து மக்களை அறிவூட்ட இருக்கிறோம். இனிமேல் தேநீருடன் சீனி தனியாக வழங்கப்பட வேண்டும்.” என்றுள்ளார்.

இங்கு கருத்துத் தெரிவித்த நீரிழிவு நோய் நிபுணத்துவ மருத்துவர் உதித்த புலுசஹபிடிய, “2006இல் 10 வீதமாக இருந்த நீரிழிவு நோய் 20 வீதமாக உயர்வடைந்துள்ளது. நகர பகுதியில் ஐவரில் ஒருவருக்கு நீரழிவு நோய் இருக்கிறது. சீனியில் களரி மட்டுமே உள்ள போதும் வேறு சக்திகள் கிடையாது.” என்றுள்ளார்.

0 Responses to இலங்கையர் ஒருவர் வருடத்துக்கு 30 கிலோ சீனி நுகர்வு; 26 வீதமானவர்களுக்கு நீரிழிவு அபாயம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com