நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றபோதும், அனைவரையும் ஒட்டுமொத்தமாக விடுவதில் அரசியல் சார்ந்த விடயங்கள் பல இருப்பதால் படிப்படியாக விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிமொழி வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை தன்னைச் சந்தித்த வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான மாகாண சபை அமைச்சர்களிடமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். முதலமைச்சருடன் மாகாணசபை அமைச்சர்களான பா.டெனீஸ்வரன், டொக்டர் பி.சத்தியலிங்கம், ரி.குருகுலராஜா மற்றும் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
நேற்று முற்பகல் 11.00 மணிக்கு ஆரம்பமான இச்சந்திப்பு பிற்பகல் 12.45 மணிவரை நீடித்ததாக இதில் கலந்துகொண்டிருந்த வடக்கு மாகாண சபை அமைச்சர் டெனீஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டபோதும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற மனதளவான நிலைப்பாட்டில் ஜனாதிபதி இருக்கின்றார். எனினும், ஒட்டுமொத்தமாக சகலரையும் விடுவிப்பதில் அரசியல் காரணங்கள் இருக்கின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டியதாக டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கைதிகளின் விடுதலைக்கான காலத்தை ஜனாதிபதி தீர்க்கமாகக் கூறியிருக்கவில்லை. இருந்தபோதும் எதிர்வரும் திங்கட்கிழமை தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் அடங்கிய அறிக்கையொன்று சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளால் தன்னிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும், அந்த அறிக்கை கிடைத்ததும் படிப்படியாக கைதிகளை விடுவிப்பது தொடர்பில் முடிவொன்றை எடுப்பதாகவும் ஜனாதிபதி தம்மிடம் கூறியதாக மாகாண சபை அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகள் படிப்படியாக விடுவிப்பு; சி.வி.விக்னேஸ்வரனிடம் மைத்திரி உறுதி!