Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் 31 பேருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை மாலை பிணை அனுமதி வழங்கியுள்ளது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக நிலுவையிலுள்ள வழக்குகளை ஆய்வு செய்து அவர்களை விடுதலை செய்வதற்கு முடியுமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சிறைச்சாலை தலைமையகம் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

31 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரிய விண்ணப்பத்தை நீதிமன்றில் இன்று தாக்கல் செய்யுமாறு அரச தரப்பு சட்டத்தரணிகளுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று பணிப்புரை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அவர்களை பிணையில் விடுதலை செய்வதற்கான அறிவித்தல் கிடைக்கப்பெறவில்லை எனக்கூறி எதிர்வரும் நவம்பர் 24ம் திகதி வரை அவர்களை விளக்கமறியல் வைக்க நீதிமன்றம் இன்று காலை உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் மீண்டும் இன்று மாலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, பிணை வழங்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் பிணைத் தொகையினை செலுத்த முடியாமல் இருப்பதால் அவர்களை மீண்டும் சிறையில் அடைக்கும் சூழல் காணப்படுவதாக தெரியவருகின்றது.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகள் 31 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com