ஒரு வருடத்துக்கு பெய்ய வேண்டிய மழையில் பாதிக்கும் அதிகமாகப் கடலூரில் மட்டும் பெய்துள்ளது என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தமிழகம் மற்றும் புதுவையில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் நீர் சூழ்ந்துள்ள நிலையில், கடலூரில் ஓராண்டுக்கு பெய்ய வேண்டிய பருவ மழையில் பாதிக்கும் மேலாக அளவில் மழை பெய்துள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. கடலூரில் 38 சென்டி மீட்டர் மழையும், நாகை காரைக்காலில் தலா 33 சென்டி மீட்டர் மழையும், காஞ்சிபுரத்தில் 25 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது.
மேலும் புதுவையில் 23 சென்டி மீட்டர் மழையும், விழுப்புரத்தில் 20.3 சென்டி மீட்டர் மழையும், சேலத்தில் 17.4 சென்டி மீட்டர் மழையும், நீலகிரியில் 8.9 சென்டி மீட்டர் மழையும், கோவையில் 6.3 சென்டி மீட்டர் மழையும் என்று பெய்து இருந்தாலும் மிகக் குறைந்த அளவில் 2.8 சென்டி மீட்டர் என்று விருதுநகரில் பதிவாகி உள்ளது என்றும் தகவல் தெரிய வருகிறது.

0 Responses to ஒரு வருடத்துக்கு பெய்ய வேண்டிய மழையில் பாதிக்கும் அதிகமாகப் பெய்துள்ளது