தமிழக அகதி முகாம்களில் தங்கியிருந்த இலங்கையர்களில் 42 பேர் இன்று செவ்வாய்க்கிழமை நாடு திரும்பவுள்ளனர்.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலம்கத்தின் வசதிப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைப்பிலும், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலுடனும் அகதிகள் நாடு திரும்பவுள்ளதாக அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
இவர்கள் இலங்கைக்கு வருவதற்கான இலவச பயணச் சீட்டு, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வழங்கப்படவுள்ளது. அதற்கு மேலதிகமாக 20 கிலோகிராம் பொருட்களை கொண்டுவருவதற்கான அனுமதியும் அகதிகளுக்கு அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளதோடு, நாட்டை வந்தடைந்தவுடன் அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த யுத்தத்தின் போது நாட்டிலிருந்து இடம்பெயர்ந்தவர்களுள், கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இதுவரை 5600 அகதிகள் நாடு திரும்பியுள்ள அதேவேளை, மேலும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான அகதிகள் இந்தியாவில் தங்கியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் சுமூகமான சூழலை தொடர்ந்து வெளிநாடுகளில் அகதிகளாக மற்றும் புலம்பெயர்ந்து வாழ்பவர்களை நாடு திரும்புமாறு அரசாங்கம் கோரியுள்ளபோதும், கடந்த காலங்களில் இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய மக்களுக்கு, அதற்கு பின்னரான காலத்தில் உரிய வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to தமிழக அகதி முகாம்களில் தங்கியிருந்த 42 இலங்கையர்கள் நாடு திரும்புகின்றனர்!