நேதாஜி போர்க்குற்றவாளி அல்ல என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிபடையில் தெரிவித்துள்ளது.
விடுதலைப் போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், 1945ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார் என்று தகவல் வெளியானது.ஆனால், அவர் அதற்குப்பிறகும் அவர் உயிரோடு மறைந்து வாழ்ந்தார் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன. இதற்கு நேதாஜி பெயர் போர்க்குற்றவாளிகளின் பெயர் பட்டியலில் இடம்பெற்று இருந்ததுதான் என்றும், அதன் காரணமாகவே அவர் தலைமறைவாக வாழ்ந்து வந்தார் என்றும் கூறப்பட்டது.
இதையடுத்து பெங்களூருவைச் சேர்ந்த ஒரு நபர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் நேதாஜி பெயர் போர்க்குற்றவாளிகள் பெயர்ப் பட்டியலில் உள்ளதா என்று கேட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள வெளியுறவுத்துறை நேதாஜி பெயர் போர்க்குற்றவாளிகள் பெயர்ப் பட்டியலில் இல்லை என்று தெரிவித்துள்ளது.
ஆனால், முன்பு எப்போதாவது நேதாஜியின் பெயர் போர்க்குற்றவாளிகள் பெயர்ப்பட்டியலில் இடம்பெற்று இருந்ததா என்பதை ஐநா தெரிவிக்க மறுக்கிறது என்றும் வெளியுறவுத் துறை குற்றம் சாட்டி உள்ளது.

0 Responses to நேதாஜி போர்க்குற்றவாளி அல்ல: வெளியுறவுத் துறை அமைச்சகம்