Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் வைக்கப்பட்டுள்ளவர்களில் (தமிழ் அரசியல் கைதிகள்), கடுமையான குற்றச்சாட்டுக்களுக்குள்ளாகியிருப்பவர்கள் பிணையில் செல்லவோ அல்லது விடுவிக்கப்படவோ மாட்டார்கள் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள 204 பேரில், 59 பேர் கடுமையான குற்றச்சாட்டுக்களுக்குள்ளாகாதவர்கள். அவர்கள் தொடர்பில் மட்டுமே இலகுவான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்று நீதியமைச்சர் கூறியுள்ளார்.

இவ்வாறு சிறையில் வைக்கப்பட்டுள்ளவர்களில் 56 பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மேலும் 124 பேர் தொடர்பில் வழக்கு விசாரணையில் நடைபெற்று வருகின்றன. தற்போது வரை, கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் 39 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 20 பேர் புனர்வாழ்வுக்கு பின்னர் விடுதலை செய்யப்படவுள்ளனர் என்று விஜயதாச ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to கடுமையான குற்றச்சாட்டுக்களில் கைதான அரசியல் கைதிகளுக்கு பிணை கிடையாது: விஜயதாச ராஜபக்ஷ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com