டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியுற்றும் பாஜக பாடம் கற்கவில்லை என்று பாஜகவின் மூத்தத் தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் படுத்தோல்வி அக்கட்சியின் மூத்தத் தலைவர்கள் மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்பை அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது.இதையடுத்து கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷியை, அத்வானி, அருண் ஷோரி மட்டுமல்லாது, ஆர் எஸ் எஸ் அமைப்பின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான கே.என்.கோவிந்தா ஆச்சாரியாவும் சந்தித்துள்ளனர்.இந்த சந்திப்பை அடுத்து அத்வானி, முரளி மனோகர் ஜோஷி,அருண்ஷோரி ஆகிய மூவரும்கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில், பாஜக கடந்த ஓராண்டில் மிகவும் பலவீனப்பட்டு உள்ளது. ஒரு சிலரின் விருப்பத்துக்காக கட்சி அடிப்பணிந்து கிடக்கிறது.டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாமல் இப்போது பீகார் தேர்தலிலும் தோல்வியைத் தழுவி நிற்கிறது.பீகார் தேர்தல் தோல்விக்கு அனைவரும் பொறுப்பு என்று பாஜக கூறியுள்ளது. இதை ஏற்க முடியாது.வெற்றி பெற்றால் அதற்கு பொறுப்பு ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தவர்கள் தோல்விக்கும் பொறுப்பேற்க வேண்டும். அல்லது பீகார் தோல்விக்கு யார் காரணம் என்று தனிக்குழு அமைத்து ஆராய வேண்டும். அந்த குழுவில் தேர்தல் பணிக்கு என்று நியமிக்கப்பட்டவர்கள் யாரும் இடம்பெறக் கூடாது என்று அத்வானி உள்ளிட்டவர்கள் தெரிவித்துள்ளனர். அறிக்கையில் யஷ்வந்த் சின்ஹா கை எழுத்திட்டு உள்ளார்.

0 Responses to டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியுற்றும் பாஜக பாடம் கற்கவில்லை: அத்வானி