புலனாய்வு தகவல்களின் அடிப்படையிலேயே புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என்று புலனாய்வுத் துறையினர் மேற்கொண்ட ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே இந்தத் தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணினார்கள் என்று குற்றஞ்சாட்டி 2014ஆம் ஆண்டு 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் 424 பேரை இலங்கை அரசாங்கம் தடை செய்திருந்தது.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை 8 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் 269 தனிநபர்கள் மீதான தடையை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது.

0 Responses to புலனாய்வு தகவல்களின் அடிப்படையிலேயே புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம்: பாதுகாப்பு அமைச்சு