நாட்டில் மதுபானம் மற்றும் சிகரட் உள்ளிட்ட புகைத்தல் பொருட்கள் பாவனையினால் வருடாந்தம் 10,000 கோடி ரூபாய் வீணடிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு அநியாயமாக செலவாகும் பணத்தினைச் சேமித்தால் எத்தனையோ தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்று நாச்சாதுவ பிரதேச செயலாளர் ஜே.டபிள்யு.என்.கித்சிரி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சுகந்தகமவில் நாளொன்றுக்கு ஒருவர் ஐந்து சிகரட் வீதம் பாவித்தால் அது 150 குடும்பங்கள் இருந்தால் 89 இலட்சம் ரூபா வரையில் செலவாகும். 390 குடும்பங்கள் உள்ள சுகந்தகமவில் 150 குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள் புகைப்பதாக கணிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று குழந்தைகளுக்கு சரியான போஷனை உணவு கிடையாது, வேலைகள் அதிகம் எனக் கூறுகிறார்கள். சிறுவர்களின் தேவைகள் இல்லாமல் போயுள்ளது. இன்று பொருளாதார பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாம், எவ்வளவு முயற்சித்தும் பணம் இல்லையாம்.
சிறுவர்களுக்குத் தேவையான பழ வகைகள் கற்பிணித் தாய்மார்களுக்குத் தேவையான போஷாக்கான உணவு வழங்க பணம் இல்லையாம். ஆனால் மதுபானம் அருந்தவும் புகைக்கவும் கஞ்சத்தனம் இல்லாமல் பணத்தை செலவு செய்கின்றனர்.
சாராயம், சிகரட் மூலம் நோய் வாய்ப்படும் போது அரசாங்கம்தான் நோக்காக செலவு செய்ய வேண்டும். இவ்வாறு சாராயம், சிகரட், பீடி, சுருட்டு புகைப்பவர்கள் சமூகத்துக்கும் அரசாங்கத்துக்கும் பாரியதொரு நாசத்தை உண்டுபண்ணுகிறார்கள்.
சிலர் இப்பாவனையை விட்டதால் தம்மிடத்திலே இப்போது பணப்புழக்கம் இருப்பதாக கூறுகின்றனர். அன்று அவர்களிடம் அவசரத் தேவைக்குக்கூட பணம் இல்லாத நிலை ஏற்பட்டது. எல்லா இடத்திலும் கடன்.
இன்று சாராயம், சிகரெட் போதைப் பொருட்களால் எமது நாடு பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளது. இலங்கையில் நூற்றுக்கு 95 வீதமான பெண்கள் இதன் துர்வாடையால் வெறுப்படைந்துள்ளார்கள். இவற்றை கூடுதலாக பாவிக்கும் ஆண்களை விட்டும் தூரமாகியுள்ளார்கள். இதனால் குடும்பங்களும், குழந்தைகளும் சீரழிந்துள்ளன.
எமது பிரதேச இலக்கிய சங்கம் இப்பிரதேசத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று கிராமத்துக்கு கிராமம் மக்களை இதன் பாதிப்புக்கள் பற்றி இதன் பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பாற்ற தெளிவுபடுத்தி வருகின்றனர். எதிர்கால சமூகத்தைப் பாதுகாத்து நோயற்ற சுகதேகியான ஆரோக்கியமான சமூகமொன்றை நாட்டுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to இலங்கையில் மதுபானம் மற்றும் சிகரட் பாவனையால் வருடாந்தம் 10,000 கோடி வீணடிப்பு!